தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய ஹிந்தி டப் சீரியல்களில் ஒன்று நாகினி. தன் பெற்றோரைக் கொன்றவர்களைப் பழிவாங்க துடிக்கும் இச்சாதாரி நாகங்கள் பற்றிய இத்தொடர் சன் குழுமத்தின் சன் டிவியில் ஒளிபரப்பாகி தமிழகத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இதனை ஹிந்தியில் கலர்ஸ் எனும் டிவி சேனல் ஒன்று ஒளிபரப்பி வருகிறது. தற்பொழுது அங்கே நாகினியின் மூன்றாவது பகுதி இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட நிலையில், அதன் இரண்டாம் பகுதி ஒளிபரப்பை, தமிழில் எதிர் நோக்கிக் காத்திருகின்றனர் சீரியல் ரசிகர்கள்.
இந்நிலையில் நாகினியின் இரண்டாம் பாகத்தை 'வியாகாம் 18' நிறுவனத்தின் 'கலர்ஸ் தமிழ்' எனும் புதிதாக களம் காண இருக்கு சேனல் ஒன்று, வருகிற பிப்ரவரி 20ம் தேதியிலிருந்து, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்ப உள்ளது.
இந்த தகவலை கலர்ஸ் தமிழ் நிறுவனம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. நாகினி மட்டுமல்லாது நடிகர் ஆர்யா தொகுத்து வழங்கும் 'எங்கள் வீட்டு மாப்பிள்ளை', நடிகர் சிவா தொகுத்து வழங்கும் 'சூப்பர் கிட்ஸ்' ஆகிய நிகழ்சிகளும் இந்த சேனலில் ஒளிபரப்பாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment