சமீபமாக ஒரு செய்தி இணையங்களில் பகிரப்பட்டு வருகிறது. வாட்ஸ் ஆப் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் வசதி கூடிய சீக்கிரம் அனைத்து பயனாளர்களுக்கு அப்டேட்ஸ் மூலம் கிடைக்கும் என்று. ஒரு பக்கம் இது நல்ல பயனுள்ள வசதி போன்று தோணலாம்.
தற்போதைக்கு ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்ய கமிஷன் இலவசமாக அல்லது குறைந்த விழுக்காடு உள்ளது. ஒவ்வொரு வங்கி மற்றும் ஆப்களுக்கு ஏற்ப இது மாறுகிறது. பயனாளர்கள் இந்த வசதிகளுக்கு அடிமையான பின்பு அந்த வரி விகிதத்தை அதிகப் படுத்தினால் என்ன ஆகும் என யோசித்து பாருங்கள் ? ஏற்கனவே வரி என்ற பெயரில் நாம் சம்பாறிக்கும் பணம் இங்கு போகிறது என புரியாமல் தவிக்கின்றனர் மக்கள். இதில் பண பரிமாற்றத்தில் கூட வரி விதிக்கப்பட்டால் மக்களின் நிலை என்ன ஆகும் ? பே டீ யம் போன்ற கம்பெனிகள் லாபம் சம்பாதிக்க நாம் உழைப்பு தான் கிடைத்ததா ?
இது குறித்த உங்கள் கருத்துகளை கீழே கமெண்ட் செய்யுங்கள். பயனுள்ளதாக கருதினால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்.

No comments:
Post a Comment