முன்பெல்லாம் வெள்ளி திரையை சார்ந்த நடிகர்களுக்கு தான் அதிக அளவில் ரசிகர் கூட்டமும் ரசிகர் மன்றமும் இருந்து.ஆனால் தற்போது இந்த நிலை அப்படியே இன்று மாறி சின்ன திரையில் உள்ள நடிகர் நடிகைகளின் மீது தொடர்கிறது.இன்னும் சொல்லபோனல் சமூக வலைத்தளங்களில் மற்ற நடிகர்களை காட்டிலும் சின்ன திரை நடிகைகளுக்கு அதிக அளவில் பாலோவர்ஸ் இருக்கிறார்கள். அதிலும் சின்ன திரை நடிகைகளுக்கு பெண்கள் ரசிகர்கள் அதிகம்.
அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் வெற்றிகரமாக நீண்ட நாள் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நாடகம் தான் தெய்வமகள்.இந்த தொடரில் சத்யா என்னும் பெயருடன் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் வாணி போஜன்.
இவர் பல இன்னல்களை கடந்து தான் இந்நிலைக்கு வந்திருக்கிறார்.பி.ஏ பட்டதாரியான இவர் முதலில் தமக்கு மிகவும் விருப்பமான ஏர் ஹோஸ்டர்ஸ் வேளையில் செய்துள்ளார்.இவர் வேலைபார்த்த நிறுவனம் நிதி நிலையின் காரணமாக பல ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அதில் ஒருவர் தான் வாணி போஜன். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த வாணி போஜன் மாடலிங் துறையில் தனது பயணத்தை துடங்கினார்.
அதற்கு பின்னர் சிறு சிறு விளம்பரத்தில் நடித்து கொண்டிருந்தார். அப்படி ஒரு விளம்பரத்தின் போது தான் வாணி போஜனுக்கு தெய்வமகள் தொடரில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்துள்ளது.இவருக்கு தமிழ் தெரியாது.அந்த சீரியலில் நடிக்க ஆரம்பித்த பின்பு தான் அவர் தமிழை கற்று கொண்டுள்ளார்.
இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட் பகுதியில் கமெண்ட் செய்யுங்கள்..!
இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.




No comments:
Post a Comment